Ad Code

Responsive Advertisement

பட்டப்படிப்பு பாடமாகிறது என்.எஸ்.எஸ்.,

நாட்டு நல பணித்திட்டம் என்ற, தேசிய மாணவர் இயக்க திட்டமான என்.எஸ்.எஸ்., பற்றி கல்லுாரிகளில், விருப்ப பாடமாக எடுக்க, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வெறும் புத்தக அடிப்படையிலான கல்வியை விட்டு மாறி, தொழிற்கல்வி, அனுபவம் மற்றும் சமூகம் சார்ந்த பாடங்களை அறிமுகப்படுத்த, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படையில், என்.எஸ்.எஸ்., திட்டத்தை, விருப்ப பாடமாக எடுக்கும்படி, யு.ஜி.சி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதனால், மத்திய கல்வி ஆலோசனை குழு அறிவுறுத்தலில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தில் இருந்து, என்.எஸ்.எஸ்., பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில், ஆறு செமஸ்டர்களுக்கு, என்.எஸ்.எஸ்., பாடத்தில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என, பாடத்திட்டத்தில் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement