பொது சேவை மையங்களில், 'ஆன் - லைன்' மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பொது சேவை மையங்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மற்றும் தமிழக மின்னணு நிறுவனமான - 'எல்காட்' மூலம் இயக்கப்படுகின்றன.
அத்துடன், அரசின் சமூக நல திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களும், ஆன் - லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த பொது சேவை மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதியும், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி, அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:
பொது சேவை மையங்களில், அத்தியாவசிய கட்டணங்களை, 'ஆன் - லைன்' மூலம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள மையங்களில், ஆன் - லைன் மூலம், மின் கட்டணம் செலுத்தலாம். மின் நுகர்வோர் எண்ணை குறிப்பிட்டால், மின் கட்டணம் தெரிவிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எந்த பகுதியின் மின் கட்டணத்தையும், பொது சேவை மையம் மூலமாக செலுத்தலாம்.இதன் தொடர்ச்சியாக, பிற கட்டணங்களை செலுத்தும் வசதியும் விரைவில், அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை