Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 113 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக உயர்கிறது. ஜூலை 1ம் தேதி கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. மத்திய அரசின் அறிவிப்பைத்தொடர்ந்து தமிழக அரசும் மாநில அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கும் என்பதால் அரசு ஊழியர்கள் ஆவலுடன் உள்ளனர். ஜூலை 31ல் ஜூன் மாதத்திற்குரிய தொழில் துறை ஊழியர் திருத்திய நுகர்வோர் குறியீட்டு எண் வெளியானதன் அடிப்படையில் சரியான அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement