Ad Code

Responsive Advertisement

தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் 431 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் காலியாக இருந்த 450 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்து பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 19 பேர் பங்கேற்கவில்லை. இதையடுத்து 431 பேர் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

அடுத்ததாக, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வும், சிறப்பாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement