ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில்வதற்கு அறக்கட்டளைகள் முன்வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் தெரிவித்தார்.
இதில், பல்வேறு கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் பயின்று வரும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ராஜஸ்தானி தமிழ்நாடு சங்கத் தலைவர் சுபாஷ்சந்த் ரங்கா, செயலாளர் பிரவீன் குமார் டாடியா, சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர்.
பினனர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர்ணன், திரைப்பட நடிகர் ஸ்ரீ காந்த், நகைச்சுவை நடிகர் சூரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் நீதிபதி சி.எஸ். கர்ணன் பேசியதாவது: பள்ளியில் பயிலும் போது மதிய உணவு சாப்பிட்டும், அரசின் கல்வி உதவித்தொகை பெற்றும் படித்து சட்டம் பயின்றேன். சரியான நேரத்தில், சரியான உதவி கிடைத்ததால் நீதிபதி பதவி முன்னேற்றம் அடைந்துள்ளேன். இது போல ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்கு அறக்கட்டளைகள் முன்வருவது மட்டுமில்லாமல்,சரியான நேரத்தில் உதவி புரிந்தால் பெரிதும் பயனடைவர்.
மாணவர்களும் அரசு, தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகையைச் சரியாகப் பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் காணவேண்டும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை