மாணவர்கள் உயர்வு பெற அன்பு, அறிவு, தேக்கம் இல்லாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று, பணி நிறைவு பெற்ற இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் கபிலர் விழாவின் 3-ஆம் நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
"தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன், நெல்லை சு.முத்துக்கு "கபிலவாணர்' விருதும், "டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா' பொற்கிழி ரூ. ஒரு லட்சமும் வழங்கி சிறப்புரையாற்றினார். விருது பெற்ற நெல்லை சு.முத்து விழாவில் பேசியதாவது:
நான் பெற்ற விருதுகளிலேயே மிக உயரிய விருதாக, இந்த விருதைக் கருதுகிறேன். நான் பள்ளிக் கல்வியை தமிழில் படித்தவன். தமிழில் முடியும், தமிழால் முடியும் என்று கருத்துகளை உள்வாங்கி, தமிழில் படித்ததால்தான் நான் வாழ்வில் உயர்ந்துள்ளேன்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உணவு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை தேவைப்படுகின்றன. இத்துடன் நாட்டையும் வீட்டையும் பாதுகாக்க வேண்டியதும் மிக அவசியம்.
நல்ல உள்ளங்கள், நல்ல அனுபவங்கள் இருந்தால்தான் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். நான் மாணவர்களுக்கு முக்கியமாகக் கூற விரும்புவது, எந்த வேலையையும் நாளைக்கு என்று தள்ளிப் போடக் கூடாது. நாளைய சூரியன் உதிக்காமல்கூட போகலாம். நாளைக்கு என்று ஒரு வேலையை தள்ளிப்போடும்போது அடுத்த நாள் புதிய வேலை வந்து சேர்ந்து விடும். தள்ளிப்போட்ட வேலை, பழைய குப்பையாக மாறி விடும்.
திருக்குறளை நான் நன்கு படித்துள்ளேன். அதில் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு கருத்துகள் உள்ளன. ஒரு வேலையைச் செய்யும்போது அன்புடன் செய்ய வேண்டும். அதாவது, அந்த வேலை மீது பற்று வைத்துச் செய்ய வேண்டும். அதேபோல அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலையில் தேக்கம் இல்லாத நிலை வேண்டும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை