தமிழகத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவதற்காக பள்ளிக் கல்வித்துறை களமிறங்கியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.
இந்த மையம் 13 தலைப்புகளில் மதுரையில் 20ம் தேதியும், கோவையில் 22ம் தேதியும், சென்னையில் 24ம் தேதியும் கலந்தாலோனை கூட்டங்களை நடத்த உள்ளது. மேற்கண்ட 13 தலைப்புகளில் 11வது தலைப்பானது மொழியை வளர்த்தல் என்பதாகும். அதில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு குழுக்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு 9 வகையான கேள்விகள் இடம் பெறுகின்றன.
அதில் முக்கியமாக மும்மொழிக் கொள்கை பற்றியது. தமிழ் தவிர சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கான கேள்விகளும் இடம் பெற உள்ளன. நாடு முழுவதும் பெறப்படும் ஆலோனையின் பேரில் சமஸ்கிருத மொழி மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை