'ஹெல்மெட்' அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, முதல்வர் அறிவித்து இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.'இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என்பது, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, காவல் துறைக்கு, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். ஹெல்மெட்டுக்காக போலீசார் அபராதம் கேட்டால், 98940 17599 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்' என, வதந்தி பரப்பி வருகின்றனர்.
அதை, 'வாட்ஸ் ஆப்'பிலும் உலவ விட்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷமிகள் வெளியிட்டுள்ள மொபைல் போன் எண் யாருடையது; இதன் பின்னணியில் இருப்போர் யார் என்பது பற்றியும், துப்பு துலக்கி வருகின்றனர். ஆனால், விஷமிகள் வெளியிட்டுள்ள மொபைல் போன் எண், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஹெல்மெட் குறித்து மட்டுமல்ல, முதல்வர் அறிவித்து இருப்பதாக, வேறு எதை பற்றியும் வதந்தி பரப்பினால், கடும் நடவடிக்கை பாயும்' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை