Ad Code

Responsive Advertisement

ராணுவத்தில் சேர 'ஆன் - லைனில்' விண்ணப்பம்

 ''நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர விரும்புவோர், இனி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை பிராந்தியத்தில், இந்த புதிய முறை செப்டம்பரில் அமலாகிறது,'' என, ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அதிகாரி (சென்னை பிராந்தியம்), அவினாஷ் டி.பித்ரே கூறினார்.



ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், ராணுவ ஆட்தேர்வு மையத்தின், புதிய இணையதளமான, joinindianarmy.nic.in - ல் காணப்படும் விண்ணப்பத்தை, 'ஆன் - லைனில்' பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். ராணுவ வீரர் பணியில் சேர விரும்புவோருக்கு, தேவையான தகுதிகள்; 'ஆன் - லைன்' மனுவோடு இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் விவரம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உட்பட, பல தகவல்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள, 'voober' என்ற புதிய மொபைல் போன், 'அப்ளிகேஷனை - ஆப்'பை, ராணுவம் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. 

'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் உபயோகிப்பாளர், அதை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்யலாம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement