Ad Code

Responsive Advertisement

'ப்ளே ஸ்கூல்' திருத்திய விதிமுறைகள் வெளியீடு

'ப்ளே ஸ்கூல்' நடத்துவதற்கான, திருத்திய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது.தமிழகத்தில், ப்ளே ஸ்கூல் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தது. இது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.



பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், புதிதாக திருத்திய விதிமுறைகளை, அரசு அறிவித்துள்ளது.முன், ப்ளே ஸ்கூல் விதிமுறையில், 'ப்ரி கே.ஜி.,' வகுப்பு மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. 

தற்போது, புதிதாக, எல்.கே.ஜி., -  யு.கே.ஜி., நடத்தவும், அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.மேலும், 

*ப்ளே ஸ்கூல் வகுப்பறைகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 

*குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். 

*அறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.

*மாணவர், 15 பேருக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 

*தகுதி வாய்ந்த ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும்.

*ஒவ்வொரு வகுப்பிற்கும், இரண்டு வழிகள் இருக்க வேண்டும். 

*வகுப்பறைகள் தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.

இவ்வாறு, அரசு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருத்திய விதிமுறைகளை, அரசு இணையதளத்தில் (tn.gov.in) பார்வையிடலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement