Ad Code

Responsive Advertisement

தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை இந்தகல்வியாண்டுக்குள் நிரப்பவேண்டும் அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தனியார், அரசு நிதி உதவி பெறும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது.
இந்த பணியிடங்களை தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் ஒழுங்குமுறை விதிகள் 1976–ன் படி நிரப்ப தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று ஐகோர்ட்டில் ஓய்வுப் பெற்ற பேராசியர் ஐ.இளங்கோவன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், ‘இந்த வழக்கிற்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தனியார் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி.பிரிவுகளில் ஆசிரியர்கள் பணியில் 213 காலிப் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியில் 111 காலிப் பணியிடங்களும் உள்ளன. 

இது தவிர, அனைத்துப் பிரிவுகளின் கீழ் ஆசிரியர் பணியில் 1478 காலிப் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாதப் பணியிடங்களில் 1673 பணியிடங்களும் காலியாக உள்ளன என்று கூறியுள்ளது. எனவே, காலியாக உள்ள இந்த பணியிடங்கள் அனைத்தையும் இந்தக் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்‘ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement