Ad Code

Responsive Advertisement

ஆன்-லைன் முறையில் சம்பளம் விரைந்து பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு.

ஆன்-லைன்' முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை, முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், உடனடியாக விடுபட்டுள்ள ஆசிரியர்களின் விபரங்களை பதிவு செய்ய தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், நடப்பு மாதம் முதல் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் ' இ-பே -ரோல்' எனும் முறையில், ஆன்-லைனில் வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தொடக்க கல்வித்துறையில், கடந்த சில மாதங்களாக ஆசிரியர்களின் விபரங்களை, குறிப்பிட்ட வலைதளங்களில், பதிவு செய்யும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன. இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் யூசர் ஐ.டி., பாஸ்வோர்டு வழங்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களின் தகவல்கள் சமர்ப்பிக்கப்படாததால், ஆன்-லைன் முறையில் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, விடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களின் விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விபரங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் இருப்பின் அதனையும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement