Ad Code

Responsive Advertisement

மருத்துவக் கலந்தாய்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுகளை நடத்தினாலும், மாணவர்களுக்கு அனுமதி கடிதம் தர வேண்டாம் என சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நாளை முதல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 63 பேர் தொடர்ந்த வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், மருத்துவக் கலந்தாய்வை நடத்தினாலும் ஒதுக்கீடு உத்தரவை வழங்க வேண்டாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்தாண்டு தேர்ச்சி பெற்றோர் இந்த ஆண்டு நடைபெறும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து 63 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், கடந்தாண்டை விட கட் ஆப் மார்க் இந்த ஆண்டு குறைவு என்பதால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு 63 மாணவர்களும் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அரசு கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு மாணவர்களுக்கு ஒதுக்கீட்டை எப்படி சரி செய்யும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement