Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பெறுவது என்பது குறித்து, பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவு, வரும், 7ம் தேதி தமிழக தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியானதும், மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது. கல்லூரிகளில் உள்ள, 'புரவிஷனல்' சான்றிதழ் போல், இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், உயர் கல்வியில் சேர்வதற்கான அத்தாட்சியாக இருக்கும். இந்த சான்றிதழை எப்படிப் பெறுவது என்பது குறித்த அரசாணையை, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா பிறப்பித்து உள்ளார். அதில், 'தேர்வு முடிவு கள் வெளியானதும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத் துறையின், http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் பள்ளிகள் மூலம், முதல் இரண்டு வாரங்களுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின், மாணவ, மாணவியர் தங்கள் தேவைக்கேற்ப பதிவு செய்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்' எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த தற்காலிக சான்றிதழ்களை, கல்லூரி படிப்பில் சேர பயன்படுத்திக் கொள்ள அரசாணையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாணையின் நகல்கள் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement