Ad Code

Responsive Advertisement

பள்ளி மேம்பாட்டுக்குரூ.100 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதிய கட்டடம், சமையல் கூடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல், கழிப்பறைகள் ஏற்படுத்துதல், போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12ல், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
நடப்பாண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியப் பங்கில் இருந்து, 67 கோடி ரூபாய், மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து, 33 கோடி ரூபாய், எட்டு தவணைகளில், மாவட்டங்களுக்கு விடுவிப்பு செய்ய வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, ஒப்புதல் அளித்து, அரசாணை ெவளியிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் ெவளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement