Ad Code

Responsive Advertisement

வகுப்பில் வருகை பதிவு குறைவு: தேர்வுக்கு அனுமதிக்க ஐகோர்ட் மறுப்பு

 மருத்துவ மேற்படிப்பில், வருகைப் பதிவு குறைவாக உள்ளதால், டாக்டர்கள் தேர்வு எழுத, மதுரை ஐகோர்ட் அனுமதி மறுத்து விட்டது. நாகர்கோவில், பெருவிளை ராஜசேகர், மனைவி லிடியா; இருவரும் டாக்டர்கள். அரசின் முன் அனுமதியுடன் குலசேகரம், தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பில் சேர்ந்தனர்.
போதிய வருகைப் பதிவு இல்லாததால், மூன்றாம் ஆண்டு இறுதித் தேர்வு எழுத, கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: வருகைப் பதிவேட்டை பரிசீலித்த போது பெரிய அளவில் மாறுபாடு இல்லை என, உறுதியானது. மனுதாரர்கள் மூன்றாண்டு பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை. மனுக்களை அனுமதித்தால் நீதிக்கு புறம்பானதாக அமையும். மாணவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. விதிகள்படி 85 சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டும். அது மனுதாரர்களுக்கு இல்லை. மனுதாரர்களை இறுதித் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement