Ad Code

Responsive Advertisement

அனைவருக்கும் கல்வி இயக்கம் : பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

சென்னை மாவட்டத்தில் 5 வயது முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், உதவித் திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன் மருத்துவ பயிற்றுனர்கள் ஈடுபடுவர். 

தினமும் காலை 8 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் வீடு,வீடாக சென்று கணக்கெடுப்பு நடைபெறும். 

கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில் உள்ளடக்கிய கல்வி முறையிலும் ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள பள்ளி ஆயத்தப் பயிற்சி மையம் மற்றும் வீட்டு வழிக்கல்வி ஆகிய முறைகளிலும் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு மருத்துவ முகாம், இயன் மருத்துவ பயிற்சி, தொழில் சார் பயிற்சி உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் குழந்தைகள், தங்கள் பகுதியில் இருந்தால் அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளரை 97888 58382 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement