Ad Code

Responsive Advertisement

குழந்தைகள் நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்ட அறிக்கை: இளைஞர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்டம் (2006) மற்றும் விதிமுறைகளின்படி, சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கான சமூகப் பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்த சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். குற்றவியல், உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையியல், கல்வி, அரசியல், அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம் (அ) மருத்துவம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாகவும், வயது 35 முதல் 65க்குள்ளும் இருத்தல் வேண்டும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, வரும் 24ம் தேதிக்குள், ஆணையர், சமூக பாதுகாப்பு துறை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை,10 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement