Ad Code

Responsive Advertisement

'டான்செட்' விண்ணப்ப வினியோகம் இன்று துவக்கம்

, 'டான்செட்' தேர்வுக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது; ௨௦ம் தேதி நிறைவடைகிறது. முதுகலை இன்ஜி., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வான 'டான்செட்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் 'டான்செட்' தேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், காலை, 9:30 மணி முதல் மாலை, ௫:௩௦ மணி வரையும், பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரம் அண்ணா பல்கலை மண்டல மையத்தில், காலை, 9:௦௦ முதல் மாலை, 5:௦௦ மணி வரையும் வழங்கப்படுகின்றன.

விண்ணப்ப கட்டணமாக, பொதுப் பிரிவினர், ௫௦௦ ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ௧௦, பிளஸ்௨ மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் நகலுடன், 250 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை, வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், www.annauniv.edu/tancet2015 எனும் இணையதளத்தில் 'ஆன் லைன்' மூலமும், இவ்வாண்டு விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. வரும், 2, 3, 14 ஆகிய தேதிகளில் விண்ணப்பம் வினியோகம் இல்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ.,வுக்கான நுழைவுத் தேர்வு, மே, 16ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரையும், எம்.பி.ஏ.,வுக்கான தேர்வு அன்றைய(16ம் தேதி) பிற்பகல் 2:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரையும் நடக்கிறது. அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., படிப்புகளுக்கான தேர்வு மே, 17ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 வரை நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement