Ad Code

Responsive Advertisement

70 பிரிவுகளில் இணையத்தில் முதுநிலை கல்வி வாய்ப்பு

மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ. 140 கோடி நிதியின் மூலம் 70 முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கு யுஜிசி பாடத் திட்டம் தயாரித்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் இணையத்தில் அனைவரும் முதுகலைக் கல்வி பயிலும் சூழல் உருவாகியுள்ளதாகவும் புது தில்லி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தகுதியுள்ள ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு அறிவுறுத்தி வருகிறது. ஆசிரியர்களே மாணவர்களுக்கு முன்மாதிரி என்பதால், அவர்கள் எப்போதும் தங்களின் அறிவை மேம்படுத்துவதிலும், சிறந்த பண்புகளைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2% ஒட்டுமொத்த கல்விக்காகவும், 1.32% உயர் கல்விக்காகவும் இந்திய அரசு செலவிடுகிறது. மத்திய அரசு தேசிய கல்வித் திட்டத்தின் கீழ், தகவல்-தொடர்பு தொழில்நுட்பத் துறை வயிலாக இணையவழிக் கல்வி பாடத்திட்டம் தயாரிக்க ரூ. 140 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதிமூலம் 70 முதுகலை பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு பாடத் திட்டம் தயாரித்துள்ளது. அந்த பாடத்திட்டம் தகவல்-நூலக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைவரும் இணையதளம் மூலம் முதுகலை கல்வி பயிலும் சூழல் உருவாகியுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement