Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவுபெற்றன: மாணவ, மாணவிகள் பிரியா விடைபெற்றனர்

 நேற்றுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்ததை அடுத்து மதியம் 1.15 மணிக்கு தேர்வு  மையங்களில் இருந்து வெளியில் வந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சில  மாணவர்கள் உடலில் சாயப் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 5ம் தேதி தொடங்கின. தொடங்கிய நாளில் இருந்தே மாணவர்கள் பிட் அடிப்பதும் தொடர்ந்தது. நேற்று வரை  சுமார் 250 பேர் பிட் அடித்து சிக்கியுள்ளனர். இது தவிர கடந்த 18ம் தேதி நடந்த கணக்குத் தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ் ஆப் மூலம் வெளியான விவகாரம்  பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்வுத்துறை எடுத்த நடவடிக்கையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 23ம் தேதி நடந்த வேதியியல்  தேர்வில் 10 கேள்விகள் குழப்பமாக கேட்கப்பட்டதால் மாணவர்கள் விடை எழுத சிரமப்பட்டனர். 27ம் தேதி இயற்பியல் தேர்வில் 3 கேள்விகள் மாற்றி  கேட்கப்பட்டதால் மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய  பாடங்களின் தேர்வுகள் நடந்தது.

இத்துடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிவுக்கு வந்தன. நேற்றைய தேர்வில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் சிவகங்கை 1, மதுரை1, திண்டுக்கல்  6, நாமக்கல் 1, அரியலூர் 1, தஞ்சாவூர் 5, விழுப்புரம் 9, கடலூர் 3, திருவண்ணாமலை 2 என மொத்தம் 33 பேர் பிட் அடித்தபோது பறக்கும் படையிடம் சிக்கினர்.  பிளஸ் 2 தேர்வில் இதுவரை சுமார் 250 பேர் பிட் அடித்ததாக சிக்கியுள்ளனர். நேற்றுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்ததை அடுத்து மதியம் 1.15 மணிக்கு தேர்வு  மையங்களில் இருந்து வெளியில் வந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சில  மாணவர்கள் உடலில் சாயப் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

சில இடங்களில் மாணவர்கள் வெடி வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் இனிப்பு வழங்கினர். தேர்வின் இறுதி நாளாக நேற்று  அமைந்துவிட்டதால் பிளஸ் 2 மாணவர்கள் இனி பள்ளியில் சந்தித்துக் கொள்ள முடியாது. நட்புடன் பழகிய பலர் கண்ணீருடன் விடை பெற்றனர். ஆசிரியர்களும்  மாணவ மாணவியருக்கு கண்ணீருடன் விடை கொடுத்து அனுப்பினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement