Ad Code

Responsive Advertisement

ஏப்ரல் 11-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறையில் வேலை பெறுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்தார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 11-ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் தனியார் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கணினி இயக்குநர், இளநிலை செயல் அதிகாரி, வரவேற்பாளர், வாய்ஸ், நான் வாய்ஸ் புராஸஸர்ஸ், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிக்கான நேர்காணல் நடைபெறும்.

இதில் 8, 10, 12-ஆம் வகுப்பு படித்தவர்களும், இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் ஐடிஐ, பட்டயப் படிப்பு படித்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் சுயவிவர குறிப்புடன் (பயோ டேட்டா) நேரில் வரவேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement