Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்: பயிற்சி, வினாக்கள் அதிகம்

பத்தாம் வகுப்பு சமச்சீர் பாடத் திட்டத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பயிற்சி, விளக்க படம், வினாக்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. பத்தாம் வகுப்புக்கு 2012 முதல் புது பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. வரும் கல்வி ஆண்டில் சில பாடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; கூடுதல் வினா, பயிற்சி, படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

'புளு பிரின்ட்' மாற்றம்:

அறிவியல் பாட வினாத்தாளில் 'புளு பிரின்ட்' சிறிது மாற்றப்பட்டு உள்ளது. உயர்கல்விக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பாடங்களில் பயிற்சி வினாக்கள், கணக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன. சமூக அறிவியலில் 'பேரிடர் மேலாண்மை' குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புத்தகங்கள்:

ஆறு முதல் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் பள்ளிகளுக்கு தற்போது அனுப்பப்பட்டு உள்ளன. தேர்வு முடிவு வெளியான மறு நாளில் இருந்து புத்தகங்களை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement