Ad Code

Responsive Advertisement

SC மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை அதிகரிப்பு

தலித் (எஸ்.சி.) மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகையை உயர்த்தி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்களை மத்திய அரசு யுஜிசி வாயிலாக செயல்படுத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் அனைத்து வகை கல்வி உதவித் தொகைகளையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பேராசிரியருக்கான உதவித் தொகை, பெண்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை, தனி பெண் குழந்தையாக இருந்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கான உதவித் தொகை ஆகியவை உயர்த்தப்பட்டன.

இதுபோல், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் இந்தப் பிரிவு மாணவர்களுக்கு, முன்னர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 16 ஆயிரம் வழங்கப்பட்டது, இனி ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

இதுபோல் முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ. 18 ஆயிரம் வழங்கப்பட்டது, இனி ரூ. 28 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement