'நேரடி மானிய திட்டத்தில், வரும், 31ம் தேதி வரை இணையாதவர்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல் மானியம் இல்லாத காஸ் சிலிண்டர்கள் தான், வினியோகம் செய்யப்படும்' என, 'இண்டேன்' திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் இணைய கடந்தாண்டு, டிசம்பர் மாதமே கடைசியாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பயனாளிகளின் நலன் கருதி, வரும், ௩௧ம் தேதி வரை இணைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில், சேராதவர்களுக்கு ஏப்ரல் முதல் மானியம் இல்லாமல், சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் வினியோகிக்கப்படும் என, இண்டேன் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், முதுநிலை மேலாளர் யோகராணி கூறியதாவது: நேரடி மானிய திட்டத்தில், இண்டேனில், 8௫ சதவீதம் வாடிக்கையாளர்கள் கோவை பகுதிகளில் இணைந்துள்ளனர். இத்திட்டத்தில் சேராதவர்களுக்கு, வரும், 31ம் தேதிக்கு பிறகு மானியம் இல்லாத சிலிண்டர்களே விற்பனை செய்யப்படும்.ஏப்., முதல் ஜூன் மாதம் வரை சேருபவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கான மானிய தொகை சேர்த்து ஒரே தவணையாக வழங்கப்படும். ஜூலை மாதத்தில் சேருபவர்களுக்கு, அதற்கு முந்தைய மாதங்களுக்கான மானியம் பெற முடியாது.இவ்வாறு, யோகராணி கூறினார்.
எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம் : 'இண்டேன்' வாடிக்கையாளர்கள் இதுவரை, இணையதளம் மற்றும் முகவரின் மூலம் மட்டுமே விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து வந்தனர். தற்போது, எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர் பெறுவதற்காக பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து, எரிவாயு இணைப்பு அடையாள எண்ணை (17 இலக்க குறியீட்டு எண்) அறிய INDANE LPGID என்ற குறியீட்டையும், நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளோமா என்பதற்கு INDANE DBTLSTATUS, மானிய விலையில் காஸ் சிலிண்டர் எண்ணிக்கைக்கு INDANE LPGQUOTA, நேரடி மானியத் திட்ட முன்வைப்பு மற்றும் மானியத்தொகை விபரங்களுக்கு INDANE SUBSIDY ஆகிய குறியீடுகளை, 'டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், விபரங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை