Ad Code

Responsive Advertisement

படிக்காதோரும் பதிவு செய்யலாம்! வேலை கிடைக்குமா; அதிகாரிகள் சொல்வது என்ன?

           'எந்த கல்வித்தகுதியும் இல்லாதோர், பிறப்புச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள்இருந்தால், வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியும்; ஆனால், வேலை கிடைக்கும் என, கூற முடியாது' என்கின்றனர் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள்.

          தமிழகத்தில், 43.14 லட்சம் பெண்கள் உட்பட, 84.68 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் பதிவு செய்யாமல் விட்டோர், இம்மாதம், 7ம் தேதி வரை, பதிவை புதுப்பிக்கும் சிறப்புச் சலுகையை அரசு அறிவித்துள்ளது. புதுப்பிக்கத் தவறியோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுப்பித்து வருகின்றனர். இந்நிலையில், 'வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்தால், துப்புரவாளர் வேலையாவது கிடைக்குமே' என, எந்த படிப்பும் இல்லாதோர் பதிவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், பல்வேறு ஆவணங்கள் கேட்பதால் பதிய முடியவில்லை என, பலரும் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

படித்து விட்டு வேலை தேடுவோருக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவே, வேலை வாய்ப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. பதிவு செய்ய பிறப்புச்சான்று, கல்விச்சான்று, ஜாதிச்சான்று, ரேஷன் கார்டு அவசியம். எதுவுமே படிக்காவிட்டால், ஜாதிச்சான்று, பிறப்புச்சான்று, இருப்பிடச் சான்றாக ரேஷன் கார்டு இருந்தால் பதிவு செய்யலாம். உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு; காவலாளி பணிக்கு, குறைந்த பட்சம், ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். படிப்பே இல்லாமல் பதிவு செய்யலாம்; அதனால், பெரிதாக எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ''துப்புரவுப் பணிக்கு கல்வித்தகுதி தேவையில்லை. உள்ளாட்சிகளில், சுவர்ண ஜெயந்தி பணி, தனியாரில், 'அவுட்சோர்சிங்' முறையில் துப்புரவு பணிக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். அப்படி ஒரு பரிந்துரை கோரப்பட்டால், பரிந்துரைப் போம்'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement