Ad Code

Responsive Advertisement

ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி!!

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு காரணமாக வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன், வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்நிலையில், ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களில் சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. பொதுவாக வீடுகளை வாங்கும்போது அதில் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் என வீட்டின் விலையில் 15 சதவீதம் அளவுக்கு செலவு நீள்வது வழக்கம். இது வீடுவாங்குவோர்க்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. இதை போக்கவும், நியாயமான விலையில் வீடுகள் கிடைக்கவும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதாவது, ரூ.10 லட்சத்திற்குட்ட வீடுகளை வாங்கும்போது அதற்காகும் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் மற்றும் மற்ற டாக்குமண்டேஷன் கட்டணத்தை வாங்கிய வீட்டுக்கடன் விகிதத்திலேயே (LTV (loan to value) ratio) செலுத்தினால் போதுமானது. தற்போது நடைமுறையில், வங்கிகள் இம்மூன்று கட்டணத்தையும் வீட்டின் மதிப்பில் சேர்ப்பதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement