Ad Code

Responsive Advertisement

'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் கல்வி: அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

தர்மபுரி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில், அரசு மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பில், மாணவர்கள் கற்கும் மற்றும் கற்பிக்கும் திறனை வளர்த்துள்ளனர்.

மாவட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 786 தொடக்கப் பள்ளிகள் மற்றும், 311 நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுக்கு ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆனாலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தர்மபுரி அடுத்த மூலக்காடு அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், இங்கு படிக்கும் மாணவ, மாணவியரின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம், மாணவர்கள் கல்வி கற்க தேவையான, 'சிடி'க்களை வாங்கி கொடுக்கின்றனர். இதனால், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களையும் கற்று, சிறந்த முறையில் தேர்வுக்கு தயாராகின்றனர்.

தலைமையாசிரியர் சண்முகம் கூறியதாவது:

வழக்கமான கரும்பலகை முறைக்கு மாறாக, 'சிடி-கம்ப்யூட்டர்' உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, பாடங்களை, பாடப்பொருள்கள், எளிதில் மாணவர்களை கவரும் வகையில் கல்வி கற்பிப்பது தான், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையின் சிறப்பு. வித்தியாசமான கல்வி முறை, மாணவர்களை கவர்ந்துள்ளது. இதனால், அவர்களின் கற்கும் திறனும், கற்பித்தல் திறனும் மேம்படுகிறது. பருவ தேர்வுகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு, நட்சத்திர குறியீடு வழங்கப்பட்டு, அவர்களின் புகைப்படங்களுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பார்வைக்கு வைக்கிறோம். பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement