Ad Code

Responsive Advertisement

சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்

பொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக வைக்க, 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை, வீடுகளில் பாதுகாப்பாக, தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம்.
அது போல, அந்த சான்றிதழ்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. http:/digitallocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, ஆதார் எண் மற்றும் பிற தகவல்களை பதிவு செய்து, 'பீட்டா வெர்சன்' எனப்படும், டிஜிட்டல் முறையில் வைத்திருக்கும் சான்றிதழ்களை, இந்த லாக்கரில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பத்திரமாக வைத்திருக்கலாம். தற்போது இந்த வசதி, ஒவ்வொரு தனிநபர்களுக்கும், 10 எம்.பி., அளவுக்குத் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. யார் இந்த சான்றிதழ்களை, இந்த டிஜிட்டல் லாக்கரில் வைக்கிறாரோ, அவர் தான் அதை எடுக்க முடியும். அதற்காக ரகசிய பாஸ்வேர்டு, குறியீடு எண்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள், தங்களுக்கு என தனியாக, டிஜிட்டல் லாக்கர் வசதியை கொண்டுள்ளன. இதில், சாதாரண தாள் வடிவில் உள்ள சான்றிதழ்களை, பாதுகாக்க முடியாது. பீட்டா வெர்சன் என்ற, கம்ப்யூட்டர் நகல் வடிவில் உள்ள சான்றிதழ்களை மட்டுமே பாதுகாப்பாக வைக்க முடியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement