Ad Code

Responsive Advertisement

தேர்வு தேதி மறக்கும் அளவிற்கு விடுமுறைகள்: 'சோதனையில்' பத்தாம் வகுப்பு மாணவர்கள்

தேர்வு தேதியே மறக்கும் அளவிற்கு, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 'சோதனைக்கு' ஆளாகியுள்ளனர்.

வாட்டி வதைக்கும் வெயிலின் நடுவே ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கின்றனர். இதனால் 'மார்ச் 31க்குள் தேர்வுகளை முடித்து விட வேண்டும்' என கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவில் மார்ச் 19ல் துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்.,10 வரை இழு...இழு என 23 நாட்கள் நடக்கிறது. மார்ச் 19ல் துவங்கும் தமிழ் முதல் தாள் தேர்வுக்கு பின் நான்கு நாட்கள் இடைவெளியில் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. வழக்கமாக ஆங்கில தேர்வுக்கு ஒரு நாளாவது விடுப்பு எதிர்பார்த்த மாணவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் 25 மற்றும் 26 என ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடக்கின்றன. ஆனால் அடுத்து மூன்று நாட்கள் இடைவெளி விட்டு மார்ச் 30ல் தான் கணிதத் தேர்வு நடக்கிறது. அடுத்து 7 நாட்களுக்கு பின் ஏப்., 6 அறிவியல் தேர்வும், அடுத்த 3 நாட்கள் இடைவெளி விட்டு சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது. மாணவர்களின் பத்து மாத படிப்பை சோதிக்க இத்தனை நாட்கள் தேவையா. ஏழு தேர்வுகளுக்கு பத்து நாட்கள் போதாதா? ஒவ்வொரு தேர்வுக்கும் ஓர் நாள் விடுப்பு அறிவித்தாலே மார்ச் 31க்குள் தேர்வை முடித்திருக்கலாம். ?வளிநாடுகளில் வகுப்பறைகளில் 'ஆன்-லைனில்' தேர்வுகளை முடித்து உடனே முடிவுகளை அறிவிக்கின்றனர். ஆனால் நாமோ ஒரு மாத திருவிழா போன்று நடத்துகிறோம். தேர்வுக்கு இடையே நீண்ட விடுமுறை உள்ளதால் தேர்வு தேதியே மறக்கும் சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்படும். நீண்ட நாட்கள் விடைத்தாள் மற்றும் வினாத்தாள் வைத்துள்ள மையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் அதிகாரிகளுக்கு சிரமம் தான். தீ விபத்து உட்பட ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பதில் சொல்வது யார்? நீண்ட இடைவெளி என்பது தேர்வின் நம்பகத் தன்மையையே பாதிக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement