சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வில் ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத் திட்டம் குழப்பமாக அமைந்திருப்பதால் அதனை மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 5-ஆம் தேதி சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.
புதிய பாடத்திட்டத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் குழப்பமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டமானது ஓவிய ஆசிரியருக்கான தொழில்நுட்பத் தேர்வு அடிப்படையில் இல்லை. மாறாக 5 ஆண்டு நுண்கலை (பி.எஃப்.டி.) படிப்பு பாடத்திட்டத்துக்கு இணையாக அமைந்துள்ளதுடன், பாடத்திட்டம் முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது.
போட்டித் தேர்வுக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகளுக்கான நூல்கள் கிடைப்பதில் சிரமம் நீடிக்கிறது. இது போன்ற காரணங்களால் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதுவது கடினமாகியுள்ளது.
எனவே, சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும் என முதலமைச்சர், அமைச்சர், அரசுச் செயலர் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை