Ad Code

Responsive Advertisement

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும் - மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் நேரில் கோரிக்கை

10 -03 -2015 அன்று அனைத்திந்திய ஆசிரியர் பேரவையினர்  மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு எஸ் .அப்துல் ரஹீம் அவர்களை நேரில் சந்தித்தனர். 


  • கள்ளர்  சீரமைப்பு பள்ளிகளில் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்குதகுதிகான் பருவம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் பணி வரன் முறை செய்யப்படாமல் உள்ளது. அவர்களுக்கு பணி வரன் முறை செய்து ஆணை வெளியிட வேண்டும்.
  • ரூ .800/- தொகுப்பு  ஊதியத்தில்  பணியாற்றிய  இடைநிலை  ஆசிரியர்களுக்கு  பணி  நியமன  நாள்  முதல்  கால  முறை  ஊதியம்  நிர்ணயம்  செய்து நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும்.
  • கள்ளர்  சீரமைப்பு பள்ளிகளில் பணி புரியும் 33 இடை நிலை ஆசிரியர்களுக்கு  5-வது ஊதிய குழுவின் 2-வது மற்றும்  3-வது தவணை நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும்  
 என அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் சார்பில் அதன் பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு எஸ் .அப்துல் ரஹீம் அவர்களிடம் மனு அளித்தனர்.

கோரிக்கையை பரிசிலித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் அளித்துள்ள எண்ணற்ற திட்டங்களை விவரித்தார். மேலும்   பிற்படுத்தப்பட்டோர் நலனில் "அம்மா"வின் அரசு என்றும் தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார். 

கோரிக்கையினை பரிசீலித்து உரிய உத்தரவுகளை அளிப்பதாக மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்  பேரவை பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களிடம் உறுதி அளித்தார்.  

சந்திப்பின் போது அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் பொதுச் செயலாளர் திரு. செ.ஜார்ஜ் அவர்கள், மாநில துணைத்தலைவர் திரு.லக்ஷ்மணன் அவர்கள், திரு.சிவாஜி அவர்கள், மாநில இணைப்பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாநில செய்தி ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள், தமிழ்நாடு பட்டதாரி மற்றும் பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி தமிழாசிரியர் கழகத்தின் செயலாளர் திரு.குருராஜன் அவர்கள் தமிழ்நாடு அணைத்து நிலை ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் திரு.துரை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement