Ad Code

Responsive Advertisement

அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு

 'அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பான் செல்லும் வாய்ப்பு தேடி வரும்' என, அறிவியல் தொழில்நுட்ப மைய மண்டல திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் கோவை மண்டல திட்ட இயக்குனர் அழகிரி சாமிராஜ் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் ஆர்வம் அதிகம் இருந்தாலும், அவர்கள் பொருளாதார நிலையில் பின் தங்கியிருப்பதால், அவர்களின் ஆர்வம் ஊக்குவிக்கப்படுவதில்லை. அத்தகைய மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்கும் மாணவ, மாணவியருக்கு 'இளம் விஞ்ஞானி' என்ற விருது வழங்கப்படுகிறது; இதற்கு 5,000 ரூபாய் பரிசும் வழங்கி அரசு ஊக்குவிக்கிறது. மாநிலம் முழுக்க ஆண்டுக்கு, 10 ஆயிரம் மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் போட்டி, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படுகிறது. அதன் பிறகு, தேசிய அளவில் நடக்கும் போட்டிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்களில் ஐந்து பேர், ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்; இந்த வாய்ப்பை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; அவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அழகிரி சாமிராஜ் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement