'நீர்நிலை பகுதிகளுக்கு, பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லக்கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
மாணவ, மாணவியரை, சுற்றுலா அழைத்துச் செல்லும்போது, சில இடங்களில் விபத்து உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விடுவதால், கல்வி சுற்றுலா திட்டத்தை, பெரும்பாலான பள்ளிகள் செயல்படுத்துவதில்லை. ஆனாலும் சில பள்ளிகள், நீர்நிலை பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதால், நீரில் மூழ்கி, மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து விடுகின்றன. சமீபத்தில், சென்னை, பூந்தமல்லி அருகே, தனியார் பள்ளி மாணவர்கள் சென்ற இடத்தில், ஒரு மாணவர், நீரில் மூழ்கி இறந்தார். இந்நிலையில், 'கல்வி சுற்றுலாவில், நீர்நிலை பகுதிகள் இடம்பெறாதவாறு, பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆறு, குளம், அருவி, அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு, மாணவர்களை கண்டிப்பாக அழைத்துச் செல்லக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
.jpeg)
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை