Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் நிறைவு: தேர்வு முடிவுகள் எப்போது?

 பிளஸ் 2 பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமைஇன்றுடன்(மார்ச் 31) நிறைவடைகிறது.முக்கியப் பாடமான உயிரியல் பாடத்தோடு, வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகியபாடங்களுக்கான தேர்வுகளும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மொழிப்பாட முதல் தாள் தேர்வுடன் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 2,377 தேர்வு மையங்களில் 8.86லட்சம் பேர் எழுதி வருகின்றனர்.ஏப்ரல் 12-க்குள் விடைத்தாள்கள் திருத்தம்: முக்கியப் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்தப் பணிகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அதன் பிறகு, 1.50 கோடி விடைத்தாள்களின் மதிப்பெண் விவரங்கள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த சி.டி.க்களில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தவறுகள் இல்லாமல் மதிப்பெண் விவரங்களைத் தயாரிக்க குறைந்தபட்சம் 2 வாரங்கள்தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே, தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி நிர்ணயிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.மொழிப்பாட விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நிறைவு: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி தொடங்கின. முதற்கட்டமாக மொழிப்பாடங்கள், ஆங்கில பாடத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. கடந்த 2 வாரங்களில் இந்த விடைத்தாள்கள் முழுவதும் திருத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

முக்கியப் பாடத் தேர்வுகள் இதுவரை... இதில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் கணிதத் தேர்வு எளிமையாக இருந்தது.வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்றுக் கடினமானவையாக இருந்தன.வேதியியல் பாடத்தில் ஏ வரிசை வினாத்தாளில் 10, 22-வது கேள்விகள் பிழையுடன் இருந்தன.இயற்பியல் தேர்வில் 3,5,10 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்த நிலையில் ஒரு மதிப்பெண் வினாக்களில் 6 வினாக்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன.இதனால், இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement