Ad Code

Responsive Advertisement

குரூப் - 2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய மாவட்ட சிவில் நீதிபதி பணியில், 162 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, நவம்பரில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற, 590 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சரிபார்ப்புப் பணி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று காலை துவங்கியது.

முதல் இரண்டு நாட்கள், தலா, 55 பேரிடமும், 6ம் தேதி முதல், தினமும் தலா, 120 பேரிடமும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மார்ச் 11ல், பணிகள் முடியும்; பின், நேர்முகத் தேர்வு நடக்கும். டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர் கூறும் போது, ''குரூப் - 2 தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது; மாவட்டக் கல்வி அலுவலர் பணித் தேர்வு முடிவுகளும், விரைவில் வெளியாகும்; குரூப் - 1 தேர்வு, மே மாதம் அறிவிக்கப்படலாம்; மற்ற புதிய தேர்வுகள், ஆண்டு திட்டப்படி அறிவிக்கப்படும்,'' என்றார். இதற்கிடையில், மோட்டார் வாகன ஆய்வாளருக்கான, 17 பணியிடங்களுக்கு தேர்வான, 42 பேருக்கு, நேற்று டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு, இன்று நேர்முகத் தேர்வு நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement