நான் இன்று தினமலர் நாளிதழில் வெளியிட்ட செய்தியில் சில சந்தேகங்கள்
எழுப்பபட்டுள்ளன. இப்பவும் சொல்கிறேன் எங்கள் கூட்டமைப்பு யாருக்கும்
போட்டியானதோ எதிரானதோ அல்ல. ஆசிரியர்களின் கோரிக்கைகளில் வெற்றி பெற
வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
இடைநிலை ஆசிரியர் பே அனாமலியை
ஏற்படுத்தியது முந்தய ஆட்சி, அப்போதெல்லாம் வாய் பொத்தி பேசாமலிருந்த
சங்கங்கள் தற்போது அரசு தேர்வு நேரத்தில் மாணவர் நலன் பாதிகின்ற வகையில்
போராட்டம் அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மீது பெற்றோர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2006இல் அணைத்து இந்திய ஆசிரியர் பேரவையும் அரசு அலுவலர் ஒன்றியமும்
இணைந்து சென்னை கோயம்பேட்டில் நடத்திய அரசு ஊழியர் ஆசிரியர் பொது மாநில
மாநாட்டில் அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் 50
சதவித அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட ஆணையிட்டார்கள்.
தற்போதும் ஆசிரியர் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றும் என்ற முழு
நம்பிக்கையோடு முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களையும் சந்தித்து
கோரிக்கை மனு சமர்ப்பித்து இருக்கிறோம். கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிப்பதாக
அவர்களும் வாக்குறுதி அளித்துள்ளார்கள். ஆசிரியர்கள் பால் அன்புள்ளம்
கொண்டவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள், எனவே அவரது புகைப்படத்தை
பயன்படுத்துகிறோம். இதற்கு முடிச்சி போட தேவை இல்லை. போராடி பெறலாம் என்ற
நம்பிக்கையை கை விட்டு அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து
வாதாடி பெறமுடியும் என்ற நம்பிக்கை உடையது தான் எங்கள் அமைப்பு. இது எந்த
கூட்டமைபையோ சங்கத்தையோ உடைக்கும் நோக்கத்தில் துவக்கபட்டதல்ல இதற்கு எந்த
பின்னணியும் கிடையாது. நம்பிக்கையுடைய ஆசிரியர்கள் மட்டும் தான் எங்கள்
பின்னணி. எங்கள் கொள்கைக்கு ஒத்த கருத்துடையவர்கள் யார் வந்தாலும் எங்களோடு
இணைத்து செயல்பட தயாராக இருகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி
!!!
இவன் செ. ஜார்ஜ் ( மாநில பொது செயலாளர் - அனைத்து இந்திய ஆசிரியர்
பேரவை ) வீ . பாலமுருகபாண்டியன்( மாநில தலைவர் - அனைத்து இந்திய ஆசிரியர்
பேரவை )
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை