''பாஸ்போர்ட் பெற அசல் கல்வி சான்றிதழ் வழங்குவதில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,'' என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
விதிகளின்படி பாஸ்போர்ட் பெற அசல் சான்றிதழ்களை பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்காக இந்த விதியிலிருந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விதிவிலக்கு அளித்துள்ளது. அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத போது, சில ஆவணங்களை முக்கியமாக மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் இருப்பதாக பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ், பாஸ்போர்ட் பெற தேவையான அசல் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல் ( பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் சான்றொப்பத்துடன்), தற்போது பயிலும் கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்களிடம் விளக்கம் பெறப்படும். மேலும் பாஸ்போர்ட் பெற வழிமுறைகள் குறித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மண்டல அலுவலக விழிப்புணர்வு மையத்தை வேலைநாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை