Ad Code

Responsive Advertisement

புரட்சித் தலைவி "அம்மா" முதல்வர் பிறந்த நாள் சிறப்பு பதிவு.... சில சுவாரசிய குறிப்புகள்....

1.இரவில் எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் தினசரி அதிகாலை 4 மணிக்கு எழுவது ஜெ.வின் வழக்கம் .அவரை எழுப்பவேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளர்கள் பூங்குன்றன், சுரேஷ் ஆகிய உதவியாளர்கள் 3.50க்கு அலாரம் செய்து விடுகின்றனராம்.2.சூரிய உதயத்திற்கு முன்னதாக பஜனைப் பாடல்கள் கேட்பது முதல்வருக்கு பிடிக்குமாம். சிலநிமிடங்கள் தியானம் இருக்கும் முதல்வர் வெறும் வயிற்றில் துளசி கலந்த நீரை குடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.


3.சூரியன் உதயமானதும் தினசரி சூர்ய நமஸ்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜன்னல் அல்லது பால்கனி வழியே சூரிய பகவானை வணங்கி விட்டுத்தான் அடுத்த வேலையை தொடங்குவார்.


4.செல்போனில் பேசுவதை பெரும்பாலும் விரும்ப மாட்டாராம். லேண்ட்லைனில்தான் பெரும்பாலோனோருடன் பேசுவார். பூங்குன்றன் தவிர அரசுத் துறையின் சீனியர் செயலாளார்கள் இன்டர்காம் போனில்தான் அவரிடம் பெரும்பாலும் தகவல்களைப் பரிமாறுவார்கள்.
5.ஹோட்டல் சாப்பாடு ஜெயலலிதா சாப்பிடவே மாட்டாராம். பெர்சனல் சமையல்காரர்தான் சமைப்பார். மதிய உணவுக்குப் பின்னர் அவர் தூங்குவதை விரும்ப மாட்டாராம்.


6.நகர வாழ்க்கையில் இருந்து சில நாட்கள் விடுபட்டு அவ்வப்போது ஜெ. கொடநாடு செல்வது எதற்காக தெரியுமா? மிதமான குளிரில் இதமான வாக்கிங் போவாராம். பேட்டரி காரை தானே இயக்கி டீ எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பாராம்.


7.முதல்வருக்கு கார் ஓட்டுவதில் அலாதிப் பிரியம். எந்த புது கார் வாங்கினாலும் சசிகலாவை பின்னால் அமரவைத்து டெஸ்ட் டிரைவ் செய்வாராம். சமீபத்தில் மஹேந்திராவின் புதிய எக்ஸ்.யூ.வி 500 காரை எஸ்டேட் பங்களாவிற்கு கொண்டு வந்து டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தாராம்.


8.ஜெயலலிதாவின் குரல் வளம் அனைவரும் அறிந்ததே. நவராத்திரி கொலுவின் போது வீட்டில் பக்திப் பாடல்களைப் பாடி அசத்தினாராம். மாலை நேரத்தில் எல்.ஆர். ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள், சூலமங்கலம் சகோதரிகளின் பாடல்களைக் கேட்பாராம்.


9.ஜெயலலிதா உடன் காரில் அமர்ந்திருக்கும் சசிகலா எப்பொழுதும், எப்பொழுதும் ஒரு டைரி, பேனாவை தயாராக வைத்திருப்பாராம். தான் போகும் வழியில் கவனிக்கும் முக்கியமான விசயங்கள் பற்றிய குறிப்புகளை அதை கவனமாகக் குறித்துக் கொள்வாராம் சசிகலா.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement