Ad Code

Responsive Advertisement

2012ம் ஆண்டு நடந்த தேர்வின் அடிப்படையில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு 3,589 பேர் தேர்வு

கூட்டுறவு சங்கங்களில் 3,589 உதவியாளர் பணியிடங்களுக்கு 2012ம் ஆண்டு நடந்த தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் சார்பில், மாநில ஆள்சேர்ப்பு நிலைய தேர்வு மையம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் டிசம்பர் 20ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 21.9.2014 முதல் 30.9.2014 வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.  இது சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள், கடந்த 3ம் தேதி மாநில ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.tஸீநீஷீஷீஜீsக்ஷீதீ.வீஸீ) வெளியிடப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வின்போது, சில விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வில்லை. இவ்வாறான விண்ணப்பதாரர்கள் கடைசி வாய்ப்பாக, வருகிற 19ம் தேதிக்குள் குறிப்பிடப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தனியே கடிதங்களும் விண்ணப் பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேபோன்று மேற்படி   தேர்வின்போது, சரியான தகுதிபெறாததால் , ஒரு சில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர்கள் முறையீடுகள் ஏதேனும் சமர்ப்பிக்க விரும்பினால் மாநில ஆள்சேர்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அலுவலருக்கு தெரிவிக்கலாம். சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் மற்றும் முறையீடு தெரிவிக்க விரும்புபவர்கள் வருகிற 19ம் தேதிக்குள், மாநில ஆள்சேர்ப்பு நிலைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், 170, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை10 என்ற முகவரியில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement