Ad Code

Responsive Advertisement

சாஸ்த்ரா பல்கலை.யில் வங்கித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி வங்கித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பயிற்சி, வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் வி. பத்ரிநாத் கூறியிருப்பதாது:

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் போட்டித் தேர்வுகளுக்காக சாஸ்த்ரா கல்வி, திறன் வளர்ப்பு மையம் இலவச பயிற்சி மையத்தை 2012-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் வங்கிகள், மத்திய, மாநில தேர்வாணைக் குழுக்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளைச் சிறந்த முறையிலும், இலவசமாகவும் நடத்தி வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில், எதிர் வரும் பாரத ஸ்டேட் வங்கியின் போட்டித் தேர்வுக்கான ஒரு நாள் இலவசப் பயிற்சி ஜனவரி 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவசப் பயிற்சியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பெயர், தொலைபேசி எண், வீட்டு முகவரி, மின்னஞ்சல் ஆகியவற்றை இயக்குநர், பயிற்சி, வேலைவாய்ப்புத் துறை, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது

ச்ழ்ங்ங்ஸ்ரீர்ஹஸ்ரீட்ண்ய்ஞ்ஃள்ஹள்ற்ழ்ஹ.ங்க்ன் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04362-304314 என்ற தொலைபேசி எண்ணிலோ ஜனவரி 9-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement