Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வு: தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமையாசிரியர்கள் ஆலோசனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேசுகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். அதோடு, தேர்ச்சி சதவீதம் குறைந்த மாணவ, மாணவிகளுக்கு எளிதாக பாடங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நவீன முறையில் பாடவாரியாக குறுந்தகடுகள் பள்ளிக் கல்வித்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறுந்தகடுகளை தலைமையாசிரியர்கள் பெற்று, அந்தந்த பாட ஆசிரியர்களிடம் வழங்கி தொலைக்காட்சி உதவியுடன் டிவிடி மூலம் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வகுப்பறைகளை சுத்தமாக வைக்கவும், சுகாதார வளாகங்கள், கழிவுநீர் வாய்க்கால்களில் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் எடுத்துரைத்தார். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement