தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், காணொலிக் காட்சி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் வகுப்புகள் நடத்தும் புதிய திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் பிரவீண் குமார் கூறியது: தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், காணொலிக் காட்சி முறையில் வகுப்புகள் நடத்தும் திட்டம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பும் ஒரு மணி நேரம் நடைபெறும். ஜனவரி 21-ஆம் தேதி முதல் இந்த வகுப்புகள் தொடங்கும்.
காணொலிக் காட்சி தொழில்நுட்ப வசதி கொண்ட அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. எந்தெந்த வகுப்புகள் எந்தெந்த தேதியில் நடத்தப்படுகின்றன, நடத்தும் கல்லூரி எது என்பன உள்ளிட்ட விவரங்கள் இயக்குநர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும்.
கல்லூரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் இணைப்பு முகவரியை (லாகின்) பயன்படுத்தி இந்த வகுப்புகளைக் காண முடியும்.
இந்த மின்னஞ்சல் இணைப்பு முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை இதுவரை பெறாத கல்லூரிகள் padmakumamest@gmail.com, ckarthikachandra@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு தங்களுடைய விவரங்களைச் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை