Ad Code

Responsive Advertisement

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு1.90 லட்சம் தேர்வர்கள் பங்கேற்பு

ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., நடத்திய, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில், 11,291 பேர் பங்கேற்கவில்லை. 94.41 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களில், 20,02,257 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும், 499மையங்களில் இத்தேர்வு நேற்றுநடந்தது. சென்னையில், 34 மையங்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.நேற்று காலை, 10:00 மணிக்கு, அனைத்து மையங்களிலும் தேர்வு துவங்கியது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுத்தனர்; கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.இத்தேர்வை, 1,90,966 பேர் எழுதினர். இது, 94.41 சதவீதம். 11,291 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

'கீ -ஆன்சர்' வதந்தி :நாமக்கல் பகுதியில், டி.ஆர்.பி., வினாத்தாளின் விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) வெளியானதாக, பரபரப்பு தகவல் தேர்வர்களிடம் பரவியது.இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவில் இருந்து வதந்தி பரவியது.அதாவது, வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் நிபுணர் குழுவில் உள்ள நபர்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி வினாத்தாள் எடுத்துள்ளனர். அதன் விடைக்குறிப்பு விவரங்கள், பெரும் தொகை கொடுக்கும் நபர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு, பணம் கொடுத்த நபர்களை, ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்க வைத்து, அவர்களுக்கு விடைக்குறிப்பு பட்டியலை கொடுத்து படிக்க வைத்துள்ளனர்.பின், புரோக்கர்களின் உதவியுடன், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், காரின் மூலம் தேர்வு மையத்திற்கு சென்றதாக கூறுகின்றனர். இருந்தும், நேற்று மதியம் வரை எவரும் சிக்கவில்லை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement