Ad Code

Responsive Advertisement

விண்ணப்பங்கள் வரவேற்பு : முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

தமிழகத்தில், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று “ முதலமைச்சர் மாநில இளைஞர் விருது “ இந்த ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதன்படி, 15 வயது முதல் 35 வயதிக்குட்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான  விண்ணப் பபடிவம் மற்றும் இதர விவரங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட விளையாட்டு பிரிவு அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement