Ad Code

Responsive Advertisement

ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில்2014ன் நோபல் பரிசு விபரம் சேர்ப்பு

ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், கடந்த, 2014ல் நோபல் பரிசு பெற்றவர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற இந்திய வீரர்கள் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு, ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல், சமூக அறிவியல் பாட புத்தகங்களில், குழந்தைத் தொழிலாளர் மீட்பு மற்றும் அவர்களுக்கு எதிரான அடக்கு முறைக்காக போராடிய இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் கல்வி நல ஆர்வலர் மலாலா யூசப்சாய்.இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், இயல் வேதியியல் மற்றும் உடற்செயலியல் போன்ற துறைகளில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்கள், குறித்த தகவல்களும் படத்துடன் இடம் பெற்றுள்ளன.

கடந்த, 2014ல் தென்கொரியாவில் நடந்த, 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 11 தங்கம், 10- வெள்ளி, 36 வெண்கலம் என, 57 பதக்கங்களுடன், இந்திய வீரர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடக்கும் என்ற தகவலும் உள்ளது.இது, கல்வியாளர்கள், டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement