Ad Code

Responsive Advertisement

TNPSC : உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல்- சான்றிதழ் சரிபார்ப்பு

உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நேர்முக உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலும், சான்றிதழ் சரிபார்ப்பும் அடுத்த மாதம் நடைபெறுகின்றன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர், தட்டச்சர் ஆகிய பிரிவுகளில் 268 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 27 ஆயிரத்து 983 பேர் எழுதினர்.

எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட திறனறிவுத் தேர்வில் 3 ஆயிரத்து 631 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு 221 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 5-ஆம் தேதியும், நேர்காணல் தேர்வு ஜனவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும். இது, நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 4 பணியிடங்களுக்கு மட்டும் பொருந்தும்.

தட்டச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தனியாக வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement