Ad Code

Responsive Advertisement

சிபிஎஸ்இ பள்ளி அங்கீகாரம்: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

 தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் மாநில அரசின் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் தேதி பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளிக் கல்வித்துறை  நீட்டித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் மாநில அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதை  எதிர்த்து சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மாநில அரசின் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதி டிசம்பர் 15ம் தேதி என்று  ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்பேரில் சில பள்ளிகள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளன. வழக்கு முடிவுக்கு வராத நிலையில்,  விண்ணப்பிக்கும் தேதியை பிப்ரவரி 15ம் தேதிக்கு பள்ளிக் கல்வித்துறை நீட்டித்துள்ளது. விண்ணப்பித்துள்ளவர்களை பொருத்தவரை பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் குறை  இருப்பவர்கள் பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆவணங்களை தபால் மூலம் அனுப்பி வைக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

அங்கீகாரம் பெற இதுவரை விண்ணப்பிக்காத பள்ளிகள் மார்ச் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு வரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர்கள் சரிபார்த்து பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கவும், மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தில் இணைப்பு பெற்று தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளை  நடத்துவோர் தமிழக அரசின் அங்கீகாரம் கட்டாயம் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தடையில்லா சான்று பெறுவது, அங்கீகாரம் பெறுவது  ஆகியவை தொடர்பாக யாரும் இனி பள்ளிக் கல்வித்துறைக்கு நேரில் வர வேண்டிய நிலை ஏற்படாது என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement