தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிய ஓய்வு திட்டத்தில் பணிக்கு சேர்ந்த 2000 பேர் ஓய்வு பெற்றும், இறந்த 1000 பேர் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் உட்பட எந்த பயனும் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தியாவில் மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலத்தை தவிர்த்து அனைத்து மாநிலத்திலும் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசால் 2004 ஜன., யில் கொண்டு வரப்பட்டாலும், தமிழகத்தில் 2003 ஏப்ரலில் முன் தேதியிட்டு அறிமுகப்படுத்தினர்.மத்திய அரசு பணிக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிநியமனம் பெற்றோரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதியதிட்டத்தின் கீழ் பணிக்கு சேர்ந்தவர்களில் 2000 பேர் ஓய்வு பெற்று விட்டனர், 1000 பேர் இறந்து விட்டனர். இவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை எதுவும் தமிழக அரசு வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் கூறுகையில், "புதிய ஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது என தமிழக அரசு கூறுகிறது. தமிழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,” என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை