Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: அப்துல் கலாம்

மாணவர்கள் தங்களது தனித் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கேட்டு கொண்டார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொருளாதார உதவியோடு

அமையும் எரி சக்தி ஆராய்ச்சி மையத்தை அப்துல் கலாம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் பாடங்களோடு தங்களது தனித்தன்மை எது எனக் கண்டறிந்து அதில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது.

பேராசிரியர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அப்துல் கலாம்.

நிகழ்ச்சியில், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், நிர்வாக இயக்குநர்கள் மரிய ஜீனா ஜான்சன், மரிய ஜீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement